டில்லி:
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு சிபிஐ கைது செய்து வழக்கில், உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், ஜாமினை ரத்து செய்யக்கோரி சிபிஐ தரப்பில் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் சிதம்பரம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு ஜாமின் கிடைக்கும் வாய்ப்பு உருவான நிலையில், அதே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அமலாக்கத் துறை சிதம்பரத்தை கைது செய்தது.
இந்த நிலையில், சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் சிதம்பரத்துக்கு கடந்த 22ந்தேதி ஜாமின் வழங்கியது. ஆனால், சிதம்பரம் திகாரில் இருந்து வெளியேற நிலை உள்ளது.
இநத நிலையில்,, சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் சிபிஐ சார்பில் சீராய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.