ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு உள்பட  52 பேருக்கு சிறை தண்டனையை உறுதி செய்துள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம், லாலுவின் உடல்நலம் கருதி அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது.

பீகார் மாநில முதல்வராக இருந்த லாலுபிரசாத் யாதவ் ஏராமாள ஊழல் புரிந்துள்ளார். குறிப்பாக கால்நடைதீவன ஊழலில் அவர்மீதான சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமின் பெற்றுள்ள லாலு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், கால்நடைகளின் தீவன ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கில் லாலு உள்பட  52 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உட்படப் பல தண்டனைகள் விதித்து  உத்தரவிட்ட நிலையில், தற்போது 35 பேரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிபதி விஷால் ஸ்ரீவஸ்தவ் உத்தரவிட்டுள்ளார்.

ஒருங்கிணைந்த பீகாரில் 1900 முதல் 1995 ஆண்டுகளில் நடந்த கால்நடை தீவன மோசடி வழக்கில், ஜார்கண்ட் மாநிலத்தின் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த திங்கள் அன்று 52 பேருக்கு சிறை தண்டனை உத்தரவிட்ட நிலையில், தற்போது 35 பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1992, 1995-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், பிகாரில் கால்நடை தீவனம், மருந்துகள் மற்றும் செயற்கை கருவூட்டல் கருவிகள் வாங்கியதாக போலி ரசீதுகள் தயாரித்து, அரசு கருவூலத்தில் இருந்து மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் பணம் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது . அந்தப் போலி ரசீதுகளுக்கு மாநில நிதித் துறை ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக மாநில கால்நடை பராமரிப்புத் துறையிடம் இருந்து அப்போதைய பிகாா் முதல்வரும் நிதியமைச்சருமான லாலு பிரசாத் பிரதிபலன் பெற்ாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இவ்வாறு மாநில அரசு கருவூலத்தில் இருந்து மொத்தம் ரூ.950 கோடி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக லாலுவுக்கு எதிராக 6 வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது. இதில் 5-ஆவது வழக்கான டொரண்டா கருவூல மோசடி வழக்கில், லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 லட்சம் அபராதம் விதித்து ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மோசடி குற்றச்சாட்டு எழுந்தபோது ஒன்றுபட்ட மாநிலமாக பிகாா் இருந்தது. அந்த மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜாா்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட நிலையில், அந்த மாநிலத்தில் டொரண்டா கருவூல அலுவலகம் இடம்பெற்றது. இதையடுத்து லாலுவுக்கு எதிரான வழக்கு விசாரணை பிகாா் மட்டுமின்றி ஜாா்க்கண்டிலும் நடைபெற்றது. அப்போதைய ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தின் டொராண்டா, தியோகர், தும்கா மற்றும் சாய்பாசா ஆகிய பகுதிகளில் இருக்கும் கருவூலத்திலிருந்து, 1990 முதல் 1995 இடையிலான காலகட்டத்தில் 36.59 கோடி மோசடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், டொரண்டா கருவூல மோசடி வழக்கில் லாலுவுக்கு ஜாா்க்கண்ட் உயா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை  விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,  சிபிஐ சிறப்பு நீதிமன்றம்  நேற்று ( 28ந்தேதி) அன்று தீவன ஊழல் வழக்கில் 52 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வித்து உத்தரவிட்ட நிலையில், தற்போது 35 பேரை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிபதி விஷால் ஸ்ரீவஸ்தவ் உத்தரவிட்டுள்ளார் .இந்த வழக்கு, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் குமார் தண்டனைகள் குறித்த விபரம் செப்டம்பர் 1ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

குறிப்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய பிரமுகர்களுள் ஒருவர். தற்போது அவர் உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி தற்காலிக ஜாமீன் பெற்றுள்ளார்.

(ஆனால், லாலு நல்ல உடல்நலமுடன், பேட்மின்டன் விளையாடி பொழுதை கழிக்கிறார். சட்டம் ஏழைகளுக்கு மட்டும்தான்போல….)