விருதுநகர்:

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி யிடம்  இன்று 4வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் அவரது வீடு மற்றும் காரில் சோதனையிடப்பட்டது. அப்போது அவரது காரில் இருந்து  ரகசிய டைரி ஒன்று கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த  டைரியில் ஏராளமானோர் தொலைபேசி எண்கள் மற்றும் முக்கிய தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகரில்உ ள்ள  சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் அவரை இயக்கியது யார், யாருடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலாதேவி, அதே கல்லூரியை சேர்ந்த 4  மாணவிகளை பண ஆசைக்காட்டி  தவறான பாதையில் அழைக்கும்  ஒலிநாடா வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,  அவரை சிபிசிஐடி போலீசார் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நடைபெற்ற  முதல்நாள் விசாரணையின்போது  காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் மற்றும் துணை பேராசிரியர் ஆகியோர் தூண்டியதாக தெரிவித்திருந்தார். அவர்களை பிடிக்க போலீசார் வலைவீசி வருகின்றனர்.

இந்நிலையில்,  நிர்மலாதேவியின் அழைப்பு குறித்து புகார் தெரிவித்துள்ள மாணவிகளிடமும் சிபிசிஐடி போலீசார்  ரகசியமாக விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து, நிர்மலாதேவியின் வீட்டிற்கு அழைத்துச்சென்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்.

அருப்புக்கோட்டையின் புறநகர் பகுதியான ஆத்திப்பட்டியில் நிர்மலாதேவி வீட்டில் நிர்மலாதேவி முன்னிலை யில்  சிபிசிஐடி அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்து,  முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர், பென் டிரைவ், மற்றும் அவரது காரில் இருந்து ரகசிய ஒன்றும்  டைரி கைப்பற்றப்பட்ட தாக கூறப்படுகிறது.

அதுகுறித்து ஆய்வு செய்து வரும் சிபிசிஐடி போலீசார், அதன் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக நிர்மலாதேவியுடன்  தொடர்பில் இருந்த அந்தப்பகுதி பெருந்தலைகள் எல்லாம் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.