டில்லி,

மிழகத்திற்கு தேவையான நிலக்கரி வாங்கியதில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ அரசு மற்றும் பொதுப்பணித்துறை மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

அதிமுக ஆட்சியில், அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர். நிலக்கரி கூடுதல் விலைக்கு வாங்கப்படுவதாகவும், அதன் காரணமாக  தமிழக அரசுக்கு ரூ. 487 கோடி இழப்பு என புகார் கூறப்பட்டது.

இந்நிலையில, இதுகுறித்து சிபிஐ,  தமிழக அரசு, பொது பணித்துறை மீது வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து விரைவில் விசாரணை  நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.