காவல்துறையினர்  மீதான புகார்களை இனி சிபிசிஐடி விசாரிக்கும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு

Must read

சென்னை: காவல்துறையினர்  மற்றும் காவல்துறை சம்பந்தமான மீதான புகார்களை  இனி சிபிசிஐடி காவல்துறை விசாரிக்க அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணையம் விதிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, காவல்துறையினர்  மற்றும் காவல்துறை சம்பந்தமான மீதான புகார்களை சிபிசிஐடி காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளை டிஜிபி அனுமதியுடன் விசாரணைக்கு பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதத்திற்குள் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும்  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளை டிஜிபி அனுமதி பெற்று விசாரிக்கலாம் எனவும் தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த ஆணையம் விதிமுறைகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article