தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 25 பசுமை பள்ளிகள்! தமிழக அரசு

Must read

சென்னை: முதலமைச்சரின் பசுமைப் பார்வையை செயல்படுத்த 25 பசுமைப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.  சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்றவாறு தமிழகத்தில் உள்ள 25 பள்ளிகளை தேர்வு செய்து பசுமை பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கடந்த  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிவித்தார். இதன்படி ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 25 பள்ளிகளுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பசுமை பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. மேலும் இந்த பள்ளிகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும்  அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தேர்ந்தெடுக்கப்படும் பசுமை பள்ளிகளில்,

சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மோட்டார் பம்புகள், பள்ளியின் அனைத்து மின்தேவைகளுக்கும் சூரிய ஆற்றலை பயன்படுத்துதல், மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துதல், குப்பையில் இருந்து உரம் தயாரித்தல், பள்ளிகளில் சிறிய அளவிலான காட்டை உருவாக்குதல், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்களை உருவாக்குதல்.
பழங்கள் தரும் மரங்களை நடுதல், நீர் பயன்பாட்டை குறைத்து கழிவு நீரை மறுசுழற்சி செய்வதை அதிகரித்தல், நெகிழி (பிளாஸ்டிக்)  இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தபடவுள்ளது.

இதை கண்காணிக்க மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், முதன்மை கல்வி அலுவலர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article