சென்னை:
பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை முறைகேடு தொடர்பான ஸ்தபதி முத்தையா மீதான வழக்ககை, சிலை கடத்தல் பிரிவில் இருந்த சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.
இது சிலை கடத்தல் வழக்கு இல்லை என்பதாலும், புதிய சிலை செய்வதில் மோசடி தொடர்பான வழக்கு என்பதால் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து, வழக்கு குறித்து விசாணை செய்த சிபிசிஐடி போலீசார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கூறியதுபோல எந்த சிலை திருட்டும் நடைபெற வில்லை என்றும், சிலை கடத்தல் என்பது தவறான வழக்கு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சிலை செய்ததில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி முருகன் கோவிலுக்கு உற்சவர் சிலை தங்கத்தில் செய்ததில், தங்கம் கையாடல் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தின் தலைமை ஸ்பதியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான முத்தையா கைது செய்யப்பட்டார்.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, உயர்நீதி மன்ற உத்தரவின்படி, ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கை சிபி சிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து தமிழக கோவில்களில் நடைபெற்ற விசாரணையில், பழனி முருகன் கோவிலில் உள்ள உற்சவர் சிலை செய்ததிலும் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரிய வந்தது.
பழனி முருகன் கோவிலில் 14 ஆண்டுகளாக இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முருகன் உற்சவர் சிலையை மீட்டு ஆய்வு செய்திதில், சுமார் 220 கிலோ எடை உள்ள அந்த சிலையில், 10 சதவிகிதம் அளவில் அதிகம் தங்கம் இருப்பதாக தெரிய வந்தது. அதாவது 22 கிலோ தங்கம் அந்த சிலையில் அதிகம் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது,
200 கிலோ அளவிலான சிலை மட்டுமே செய்ய அறிவுறுத்தப்பட்ட நிலையில், 221 கிலோ எடையில் சிலை செய்யப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுந்தது. இந்த சிலை செய்ய கூடுதலாக 12 கிலோ தங்கத்தை அளித்தவர்கள் யார் யார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து நம்பிக்கை மோசடி செய்து தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர், தலைமை ஸ்தபதி முத்தையாவை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முத்தையா, கும்பகோணம் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபவ முன் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் பழனி கோயில் முன்னாள் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜாவையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில், தற்போது ஸ்தபதி முத்தையா மீதான வழக்கை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து, சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி பிரிவு போலீசார், சிலை செய்ததில் எந்தவித தவறும் இல்லை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கூறியதுபோல எந்த சிலை திருட்டும் நடைபெற வில்லை என்றும் அறிக்கை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பழனி முருகன் கோவில் முன்னாள் இணை ஆணையர் கே.கே. ராஜா கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.