டில்லி:
காவிரி நீர் பிரச்சினையில் மத்திய அரசு இரு மாநில முதல்வர்களுடன் கலந்துபேசி அறிக்கை அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்து உள்ளது.
தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
காவிரி பிரச்சினை தொடர்பாக கடந்த 20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு, தமிழகத்துக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் 7 நாட்களுக்கு காவிரியில் தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை. அதற்கு மாறாக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த நிலையில், காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தமிழக அரசு சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
court
நாளையும், நாளை மறுநாளும் கூடுதலாக இரண்டு நாட்களுக்கு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. 
ஏற்கனவே அளிக்கப்பட்ட தண்ணீர் திறப்புக்கான அவகாசம் இன்றுடன்  முடிவடையும் நிலையில் கூடுதலாக 2 நாட்கள் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய, மாநில அரசுகள் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் நீதிமன்ற மாண்பு பாதிக்கும்
கர்நாடகாவின் தீர்மானங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை கட்டுப்படுத்தாது
தமிழக, கர்நாடக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரத்தை வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்க அட்வகேட் ஜெனரல் முகுல்ரோத்தகிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் அடுத்த விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.