பெங்களூரு:
மிழகத்துக்குத் திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடக அரசு நிறுத்தி உள்ளது. இது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவுப்பிறப்பித்தது. இதனையடுத்து கர்நாடக அரசு நீர் திறக்க சம்மதித்தது பிறகு தங்கள் மாநிலத்தில் போதுமான மழை பெய்யவில்லை தற்போது அணைகளில் உள்ள நீர் குடிநீருக்கு மட்டும்தான் உள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
a
மேலும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது கர்நாடக அரசு. மனுவை விசாரித்த நீதிமன்றம் கண்டிப்பாக தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று எச்சரிக்கை செய்தது. அதன்பிறகே காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது கர்நாடக அரசு.
இந்த நிலையில், “தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட்டோம். இப்போது இருக்கும் நீர்  எங்கள் மாநில குடிநீர் தேவைக்கே போதாது” என்று கூறியிருக்கும் கர்நாடக அரசு, தமிழகத்துக்கு திறந்து விட்ட நீரை நிறுத்திவிட்டது.  மேலும், வழக்கமாக அணைகளில் இருந்து வெளியேறும் நீரையும் நிறுத்தியிருக்கிறது.