டில்லி

கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்ரம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்துக்குக் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

தமிழக அரசு “கர்நாடகா 15,000 கன அடியில் இருந்து 5,000 கன அடி வரை தொடர்ந்து தண்ணீரின் அளவை குறைத்து வருகிறது. நாங்கள் மழை பற்றாக்குறை இருப்பதை ஒத்துக்கொள்கிறோம், ன்ல் இருக்கும் நீரைக்கூடத் தர மறுத்தால் எப்படி? என வாதிட்டது.

கர்நாடகா, ”காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படியே தண்ணீர் திறக்கப்படுவதாகவும் தமிழகத்துக்கு 2,500 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும்” எனத் தெரிவித்தது.

தமிழக அரசு வினாடிக்கு 12,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறைவான மழை பெய்யும் காலங்களில் உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ள அளவு தண்ணீரை வழங்க வேண்டும் எனவும் முறையிட்டது.

இந்தவாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,

“காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கமுடியாது. யாருமே காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது. 

15 நாட்களுக்கு ஒரு முற காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூடிச் சூழலை ஆராய்ந்து வருகிறது. கர்நாடக அரசு காவிரியில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரைத் திறக்க உத்தரவிட்ட மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்” 

 என்று உத்தரவிட்டனர்.

தமிழக அரசின் காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீரைத் திறக்க கோரும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக அரசு வறட்சி கால அட்டவணைப்படி தமிழகத்துக்கு உரிய நீரைக் கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.