திருச்சி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பினர் திருச்சி, தஞ்சாவூரில் ரெயில் மறியல் போராட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டியக்கம் சார்பில் தஞ்சையில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
tanjore1
மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை வந்த பயணிகள் ரெயிலை விவசாயிகள் மறித்தனர். ரெயில் என்ஜீன் மீது ஏறி மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார்கள்.
தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் கையில் பாய், படுக்கை விரிப்புகள், மண் அடுப்பு எடுத்து வந்தனர்.
அவர்கள் தண்டவாளத்தில் அடுப்பை எரிய வைத்து சமையல் செய்யும் போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு உருவானது. முன்னதாக ரெயில் மறியலுக்கு சென்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் உபயத்துல்லா, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து. செல்வம், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், தேர்தல் பணிக்குழு தலைவர் எல். கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமி, அஞ்சுகம் பூபதி, காரல் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் துரை. மாணிக்கம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சண்முகம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகர தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சாமி. நடராஜன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
tanjore
 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும், கர்நாடகத்திற்கு சார்பாக நடந்து கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்தும் தண்டவாளத்தில் சமைத்து உண்டும் தலை வைத்துப் படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி நதி நீர் பிரச்சனையில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர். அதன்படி இன்று காலை 6 மணியில் இருந்து ரயில் மறியல் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காவிரி நதி நீர் பாயும் முக்கிய மாவட்டமான தஞ்சை மாவட்ட விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்.
இங்குள்ள தஞ்சை ரயில் நிலையத்தில் விவசாயிகள், ரயில்வே தண்டவாளத்திலேயே அமர்ந்து உணவு சமைத்து உண்டும் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தும் நுதன முறையில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனால் தஞ்சை ரயில் நிலையமே ஸ்தம்பித்து போயுள்ளது.இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள், வீட்டில் இருந்து வரும் போதே சமைத்து வைத்த உணவையும் வாழை இலையையும் கையில் கொண்டு வந்து தஞ்சை ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர்.
பின்னர், தடைகளை மீறி விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை வாழை இலையில் பரிமாறி உண்டு போராட்டம் நடத்தினார்கள்.மேலும், சுள்ளி, பானை ஆகியவற்றை கையில் கொண்டு வந்து, தண்டவாளத்திலேயே அடுப்பு மூட்டி சோறாக்கி உண்டு நுதன முறையில் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தண்டவாளத்தில் உணவு சமைத்து போராட்டம்
திருச்சி – கரூர் குடமுருத்தி ரயில் தண்டவாளத்தில் குடிசை போட்டு விவசாய சங்கத்தினர் நுதன போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தின் போது தண்டவாளத்தில் நாற்று நட்டும் விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தின் போது தஞ்சை – கரூர் ரயிலை மறித்து போராட்டம் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
திருச்சி:
திருச்சியில் அய்யாகண்ணு தலைமையில் குடமுருக்கு பாலத்தில் போலீசார் தடையை மீறி சுமார் 50 பேர் மட்டும் திரண்டு ஓடும் ரயிலை மறித்தனர். வேகமாக வந்த ரயில் கடைசியில் வீரமான விவசாயிகள் முன்னர் சரண்டர் ஆனது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி அருகே விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று காலை திரண்டு வந்தனர்.
trichy
அவர்கள் திருச்சி-கரூர் ரெயில் பாதையில் குடமுருட்டி பாலம் அருகே ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் தண்டவாளத்தில் குடில் அமைத்தனர். தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் அழைத்து வந்த மாடுகளுடன் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
மேலும் காய்ந்து போன நெற்பயிர்களை கைகளில் ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
இதற்கிடையே அந்த வழியாக திருச்சி நோக்கி சரக்கு ரெயில் அதிவேகமாக வந்தது. விவசாயிகளின் போராட்டத்தை கண்ட ரெயில் சற்று தூரத்திலேயே திடீர் பிரேக் போட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் விவசாயிகளை கைது செய்தனர். மேலும் அவர்கள் அமைத்திருந்த குடில்களையும் அகற்றினர்.
முன்னதாக அய்யாக்கண்ணு கூறுகையில்,
இந்த 48 மணி நேர போராட்டத்தில் விவசாயிகளாகிய நாங்கள் முழுமையாக ஈடுபடுவோம்.
விவசாயத்தை காப்பாற்ற இதைத்தவிர எங்களுக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை.
உடனடியாக மோடி தலைமையிலான மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
இல்லையென்றால் நாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை என்றார்.