சென்னை:
ர்நாடக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடக்கும் நாளைய முழு அடைப்பில் திரையுலகம் பங்கேற்கும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தெரிவித்துள்ளார்.
download
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரிக்காக நாளை நடக்கும் முழு அடைப்பில் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் பங்கேற்கிறது.  நாளை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.
நாளை காலை முதல் மாலை வரை திரையரங்குகளில் படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட சங்கங்கள் கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

[youtube-feed feed=1]