டெல்லி:
காவிரி மேலாண்மை வாரியம் உச்ச நீதி மன்ற உத்தரவுபடி 4 வாரத்துக்குள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்தியஅரசின் நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் நேற்று அதை அறிவித்தார்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி, சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்காத கர்நாடகத்தை, தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு ‘தமிழகத்திற்கு, வினாடிக்கு, , 6,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும்’ என,  கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் 20ம் தேதி உத்தரவிட்டது.
krs
மேலும், ‘காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, நான்கு வாரங்களுக்குள், காவிரி மேலாண்மை  வாரியத்தை அமைக்க வேண்டும்’ என்றும் மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தர விட்டது.
ஆனால், கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல், ‘தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடமுடியாது, என சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது..
இதையடுத்து  27ந்தேதி நடைபெற்ற காவிரி வழக்கு விசாரணையில், நீதிபதிகள் கர்நாடக அரசை கடுமையாக சாடினர். கர்நாடக அரசு சட்டமன்ற தீர்மானம் தங்களை கட்டுப்படுத்தாது என கூறி,  மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்தார்.
நேற்று மத்தியஅமைச்சர் உமாபாதி தலைமையில் நடைபெற்ற இரு மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் சமரச முடிவு எட்டாத நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு  முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசி சேகர்  அவர் கூறியதாவது:–
­­­கடந்த 27–ந் தேதியன்று காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது அப்போது மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகளை  ஏற்கனவே தொடங்கி இருக்கிறோம். கோர்ட்டு உத்தரவின்படி 4 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.