புதுச்சேரி:
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கான புதுச்சேரி மாநில அரசின் பிரதிநிதியாக பொதுப்பணித்துதுற தலைமை பொறியாளர் சாமிநாதன் பெயரை மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு பரிந்துரை செய்துள்ளது.

காவிரி நதிநீர் வழக்கு தொடர்பான வழக்கு விசாரணையின் போது நான்கு நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களது பிரதிநிதிகள் பெயர்களை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதன்படி காவிரி மேலாண்மை வாரியத்துக்கான பிரதிநிதியை தமிழக அரசு இன்று பரிந்துரைத்துள்ளது. காவிரில் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் சுப்பிரமணியத்தின் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பான விவரங்கள் மத்திய அரசிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டன.
அதேபோல் காவிரி மேலாண்மை வாரிய உறுப்பினரை புதுச்சேரி அரசு நியமித்துள்ளது.
புதுச்சேரி பொதுப்பணித்துரை தலைமை பொறியாளர் சாமிநாதன் பெயரை புதுச்சேரி அரசு பரிந்துரைத்துள்ளது. ஆனால் கேரளா மற்றும் கர்நாடகா அரசுகள் தங்களது பிரதிநிதிகளை பரிந்துரை செய்யவில்லை.
Patrikai.com official YouTube Channel