தர்மபுரி

தற்போது ஒகேனக்கல்லில் காவிரி நீர் வர்த்து குறைந்துள்ளது.

அண்மையில் தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அவ்விரு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்த நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

தற்போது கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.  இங்குநேற்று வரை வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

ஆயினும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இரு அணைகளில் இருந்து மீண்டும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  எனவே அடுத்த 2 நாட்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.