டில்லி:

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும்  உச்சநீதி மன்றததில் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே கடந்த 8ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, காவிரி நதி நீர் பங்கீடு குறித்து  வரைவு திட்டம் தயாரிக்க மத்திய அரசு மேலும் அவகாசம் கோரியதை தொடர்ந்து வழக்கு 14ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

அதன்படி காவிரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது, காவிரி நதி நீர் பங்கீடு குறித்து  வரைவு திட்டம் தயாரிக்க, கர்நாடக தேர்தலை காரணம் காட்டி அவகாசம் கோரி இருந்தது.

அப்போது, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதி மன்றம், காவிரி நதி நீர் பங்கீடு குறித்து இதுவரை  மேற்கொண்ட பணிகளை அறிக்கையாக தாக்கல் செய்ய  மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் கர்நாடக தேர்தல் கடந்த 12ந்தேதி முடிவடைந்துள்ள நிலையில்,இன்று காவிரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இன்றைய விசாரணையின்போது  காவிரி வரைவுத்திட்டம் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இதை உறுதிப் படுத்தி இருந்தார்.

இந்நிலையில் வழக்கு இன்று உச்சநீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.