சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி காவிரி விவகாரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று துணை முதல்வர்  ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஆறு வார கெடுவும் விதித்தது. ஆனால் மத்திய அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை  நடத்தி வருகின்றன. விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தற்கொலை செய்துகொள்வோம் என்று அக்கட்சியின் எம்.பி. நவநீத கிருஷ்ணன் பாராளுமன்றத்திலேயே தெரிவித்தார்.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி காவிரி விவகாரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று துணை முதல்வர்  ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.