டில்லி:

காவிரி தொடர்பான வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள காவிரி வரைவு திட்டம் குறித்து இன்று  உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.  இன்றைய விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் கருத்து தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில், உச்சநீதி மன்ற தீர்ப்புபடி, காவிரி வரைவு திட்டத்தை மத்திய அரசு பல இழுபறிக்கு பிறகு கடந்த 12ந்தேதி தாக்கல் செய்தது.  அதைத்தொடர்ந்து வரைவு திட்டம் குறித்து விளக்கம் அளிக்க தமிழகம் உள்பட 4 மாநில அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது, தமிழகம் தனது கருத்தை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில் தேர்தல் பரபரப்பு நிலவி வருவதால், கர்நாடகா சார்பில் கருத்து தெரிவிக்கப்படாது என கூறப்படுகிறது.

இதன் காரணமாக விசாரணை மேலும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.