சென்னை,
மிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி வருகின்றனர்.
தமிகத்துக்கு கர்நாடகம் காவிரி நீர் திறந்துவிடாததை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மெத்தனம் காட்டிவருதை கண்டித்தும், விவசாய சங்கத்தின்ர் தமிழகத்தில் அனைத்து கட்சி ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
stalin11
சென்னை – ஸ்டாலின் கைது
சென்னை, பெரம்பூர் ரயில்வே ஆடிட்டோரியத்திலிருந்து ரயில் நிலையம் நோக்கி திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அமர வைத்துள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டையில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற சென்னை முன்னாள் மேயரும், தற்போதைய சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான  மா.சுப்பிரமணியன்  தொண்டர்களுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் திமுக முன்னாள் எம்.பி.  டி.ஆர்.பாலு தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
triy-train
திருச்சி – நேரு கைது
விவசாயிகளுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளதையடுத்து திருச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது திமுகவினர் மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ரயில் மறியலில் ஈடுபட முயன்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதனால் திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் குறைந்த வேகத்துடன் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்புக்கா போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
salem
 
சேலம் – வீரபாண்டி ராஜா கைது
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா தலைமையில், 200-க்கும் மேற்பட்டோர் முக்கோணம் பகுதியில் இருந்து கோ‌ஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் அருகே உள்ள வீரபாண்டி ரெயில் நிலையம் முன்பு வந்தனர்.
அப்போது, வஞ்சிக்காத வஞ்சிக்காத தமிழகத்தை வஞ்சிக்காதே, மத்திய அரசே, மத்திய அரசே காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திடு உள்ளிட்ட பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பி வண்ணம் மறியல் செய்ய ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
இதையடுத்து போலீஸ் துணை கமி‌ஷனர் ராமகிருஷ்ணன், உதவி கமி‌ஷனர் ரவீந்திரன் ஆகியோர் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால், போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு -முள்ளு ஏற்பட்டது. ரெயில் நிலையத்துக்குள் செல்ல தங்களை ஏன்? அனுமதிக்கவில்லை, மறியல் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால், இதனை போலீசார் மறுத்தனர்.
இதனால், போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து தி.மு.க. வினர் சிறிது நேரம் ரெயில் நிலையம் முன்பு நின்று மத்திய அரசையும், ரெயில் நிலையத்துக்குள் செல்ல விடாமல் தடுத்த போலீசாரை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால், அங்கு மேலும், பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து, போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், முன்னாள் மேயர் ரேகாபிரிய தர்ஷினி, ஒன்றிய செயலாளர்கள் பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், மாணிக்கம், ஆட்டையாம்பட்டி பேரூராட்சி தலைவர் முருகபிரகாஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சிவலிங்கம், இளைஞரணி அமைப்பாளர் சந்திர மோகன், விவசாய அணி துணை அமைப்பாளர் அருள், பூலாவரி ஊராட்சி முன்னாள் துணை தலைவர் ரவி, ஊராட்சி செயலாளர் வெங்கடாசலம், அரியானூர் பச்சியப்பன், பாரப்பட்டி குமார், சோளம்பள்ளம் கார்த்தி, வின்சென்ட் நாகா உள்ளிட்ட தி.மு.க.நிர்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் வேனில் ஏற்றி அழைத்து சென்று நெய்க்காரப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

 
துரைமுருகன் – எ.வ.வேலு கைது
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தி.மு.க.வினர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை ரெயில் மறியல் போராட்டம் செய்தனர். பெங்களூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ, மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ் செல்வி, மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட தி.மு.க.வினர் ஏராளமானோர் ரெயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
திருவண்ணாலை  இன்று காலை ரயில் மறியலில் ஈடுபட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 5000 தொண்டர்கள் மற்றும் விவசாயிகள் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் கட்சியினர் உட்பட 5000 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
எம்ஆர்கே பன்னீர் செல்வம் கைது
சிதம்பரத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பால கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ரெயில் மறியல் போராட்டத்தையொட்டி சிதம்பரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தில் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதுபோல மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் வடகோவை ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர் பகுதிகளிலும் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.
இங்கு திரளான விவசாயிகள், மக்கள் நலக்கூட்டி யக்கத்தினர் மற்றும் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் திரளான விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல ஊட்டியில் நடந்த ரெயில் மறியல் போராட்டத்தில் திரளான விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் போராட்டம் – கைது
புதுச்சேரியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திமுகவினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர் இதில்  400 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி நதி நீர் வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நாடாளுமன்றத்தின் மூலம் தான் மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இது தமிழர்களுக்கு எதிரான போக்கு எனக்கூறி தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. விவசாய அமைப்புகளும் அக்டோபர் 17, 18 தேதிகளில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்தன.
இதன்படி புதுச்சேரியில் தெற்கு, வடக்கு மாநில திமுக சார்பில் திங்கள்கிழமை காலை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ, வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்பி. சிவக்குமார் தலைமையில் மங்களூர் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்ட 400-க்கு மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் புதுவை ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி
இதைப்போல் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி செயலாளர் ரமேஷ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர்.