சென்னை 

சென்னை நகரில் கனமழை பெய்ய உள்ளதால் பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளை கண்காணிக்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிடட மாவட்ட்ங்களில் காண மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இன்னும் 2 தினங்களுக்கு இந்த மழை தொடரலாம் எனவும் எச்சரிக்கையை தெரிவிக்கபட்டுள்ளது.  அத்துடன் 24 மணி நேராததுக்குதொடர்ந்து கனமழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

இதனால் சென்னை அருகில் உள்ள பூண்டி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  இப்போது பூண்டியில் 43.3% மட்டும் செம்பரம்பாக்கத்தில் 69.6% கொள்ளளவுக்கு நீர் உள்ளது.  இது விரைவில் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  

எனவே இந்த இரு நீர்நிலைகளையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என தமிழக பேரிடர் மேலாண்மை துறைக்கு மத்திய நீர்  வளத்துறை ஆணையம் எச்சரித்துள்ளது.