மெட்ராஸ்’ படத்தில் கார்த்தி ஜோடியாக குடிசை மாற்று குடியிருப்பில் வாழும் பெண்ணாக நடித்து கவர்ந்தவர் கேத்ரின் தெரசா. கதகளி, கணிதன், கடம்பன். கலகலப்பு 2, நீயா 2 போன்ற படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு தமிழில் கைவசம் படங்கள் எதுவும் இல்லை.இவர் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனக்கு பிடித்த உணவு வகைகளை செய்து வெளியிட்டு வருகிறார்.


பிரஷ்ஷான காய்கறிகளை கட் செய்து சுவையான சேல்ட் ஒன்றை அவர் தயாரித்தார். சேலட் செய்வது எளிதான விஷயம் ஆனால் இவர் தயாரித்த சேல்ட் கொஞ்சம் கடினமான தாம். இது லெபனான் பாணியிலான சேல்ட் ஆகும்.
இதுபற்றி அவர் கூறும்போது.’இன்றைய சேலட் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதை கட் செய்ய நான் பயன்படுத்திய கத்தி மிகவும் கூர்மையானது’ என்றார் கேத்ரின். தான் தயாரித்த சேட்டை அவரே ரசித்து சாப்பிட்டதுடன் தோழிகளுக்கும்பகிர்ந்தார்.