பல ஆண்டுகளுக்கு முன்பு கொல்லம் மாவட்டத்தில் பரவூர் கிராமத்தில் பின்தங்கிய இனத்தை சேர்ந்த ஒரு பெண் தற்செயலாக தனது அரிவாள் கொண்டு ஒரு எறும்பு மலையை இடித்ததாக வரலாறு கூறுகிறது. புற்றிலிருந்து இரத்தம் கசிவதைப் பார்த்துப் பதட்டமடைந்த அப்பெண் அருகிலிருக்கும் ஈழவர் தலைவரிடம் ஓடினாள். அந்தப் புற்று பத்ரகாளியின் உறைவிடம் என்று அறிவித்து அங்கே ஒரு சிலையை நிறுவினார். பல வருடங்கள் கழித்து அந்த இடத்தில் ஒரு கோவில் கட்டப்பட்டது.
ஈழவர் தலைவரின் குடும்பம் கோவிலின் பூசாரிகளாகி ஒவ்வொரு ஆண்டும் ‘மீனா பரணி’ திருவிழாவின் போது அவர்கள் தேவிக்கு பூஜைகளை நடத்துவர். ஒரு ஈழவர் (ஓ.பி.சி. சாதி) தான் பூஜைக்குப் பொறுப்பாக இருந்தாலும், அந்த வட்டாரத்தில் நாயர்கள் (ஃபார்வார்ட் சாதி) தான் சக்தி வாய்ந்தவர்களாக மற்றும் பணக்காரர்களாக இருந்தனர்.
கடந்த சில ஆண்டுகளில், இந்த நிலை நாயர்களுக்கு சாதகமாக மாறி கோவில் குழுவின் எல்லா பதவிகளையும் அவர்கள் அபகரித்து கொண்டனர். 1956 ஆம் ஆண்டில், சில ஈழவர் குழுக்கள் மாவட்ட நீதிமன்றத்தை அணுகி இன்னும் அதிக பிரதிநிதித்துவம் கேட்டனர் . மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்துடைய ஆணை நாயர்களுக்கு ஆதரவாக இருந்தது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர், உச்ச நீதிமன்றம் குழு அமைப்பதற்கான வழிமுறைகளை வகுத்தது – நான்கு நாயர், கோவிலை சுற்றியுள்ள நான்கு இடங்களிலிருந்து ஒருவர், கோவில் பூசாரி குடும்பத்தில் இருந்து மூவர், மேலும் நாயர் அல்லாத வேறு சமூகத்தைச் சேர்ந்த மூன்று இந்துக்கள் .
சில வருடங்களுக்கு முன்பு, அருண் லால் என்ற ஈழவர், குழுவின் செயலாளராக இருந்த போது, ஒரு சில நாயர்கள் வானவேடிக்கைகுத் தடை கோரி உள்ளூர் நிர்வாகத்தை அணுகினர். “நாங்கள் விதிமுறைகளை மீறுவதாகக் குற்றஞ்சாட்டி ஒரு நாள் தடை உத்தரவு வாங்கினர். தற்போதைய குழுவின் உறுப்பினர்கள் பெரும்பாலும் நாயர்கள், மேலும் அவர்கள் ஆடம்பரத்தை மிஞ்ச முயற்சி செய்து சோகம் நேர்ந்தது, “என்று அவர் கூறினார்.
பகுதியில் வாழும் பல மக்கள் சத்தமான மற்றும் ஆபத்தான பட்டாசுகளுக்கு எதிராக குரல்கொடுத்த போதிலும், 80 வயதான பங்கஜாக்ஷி அம்மா தான் சட்டப்படி புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில் தான் கூடுதல் மாவட்ட நீதபதி வானவேடிக்கை உபயோகிக்க கூடாது என்று உத்தரவிட்டார். இங்கே கூட, தெளிவான ஒரு சாதி நோக்கம் உள்ளது,பலர் ‘ஒரு நாயர் கட்டுப்பாட்டிலுள்ள கோவிலுக்கு எதிராக சென்ற ஈழவர் ‘என்று அவளைக் கூறினர்.
“இந்த மக்கள் (பெரும்பாலும் ஈழவர் கோயிலை சுற்றி வாழ்வர்) அனைவரும் கோவிலுக்கு சொந்தமான சில நிலங்களை எடுத்துக் கொண்டுள்ளனர், எனவே தான் வானவேடிக்கையினால் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது”, என்று ட்ரைவர் அரவிந்தாக்ஷன் கூறினார்.
பங்கஜாக்ஷி அம்மா சக்திவாய்ந்த கோவில் குழுவை எதிர்த்த துணிச்சலான பெண்ணாக பாராட்டப்பட்டாலும், தனது சொந்த கிராமத்தில் பலராலும் அவநம்பிக்கையுடன் பார்க்கப்பட்டார். “அவர்கள் இந்த கோவில் வளம் பெறுவதை விரும்பவில்லை. எனவே தான் அவர்கள் கலெக்டரிடம் சென்றார்கள்” என்று பைனான்சியர் பைஜு கூறினார்.
பங்கஜாக்ஷி அம்மாவின் சாதி அல்லது சமூகம் அவரது போராட்டத்துடன் சம்பந்தப்படவில்லை என்று நம்பும் 62 வயதான தேவராஜன் போன்ற சிலர் நம்புகின்றனர். “அவர் இங்கு தான் அருகாமையில் வாழ்கிறார். நீண்ட நீதிமன்றம் போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு ஒரு வீட்டைக் கட்டினார். ஒருவருக்கு வானவேடிக்கை மீதுள்ள ஆசையினால் ஒருவருடைய வீடு சேதமடையும் போது , அவரது சமூகத்தை எப்படி ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள முடியும்? “என அவர் கேட்டார்.