மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதிய தீண்டாமை காட்டப்பட்டது என்றும், அவர்கள்மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை    மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பட்டியிலின சமூகத்தினர் புகார் அளித்துள்ளனர்.

 பொங்கல் திருவிழாவை ஒட்டி மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை புறக்கணித்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்கு அமைச்சர் மூர்த்தி காரணம் என அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் புகார் கூறிய நிலையில், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புகொடி கட்டினர். இதற்கு மதுரை ஆட்சியர் விளக்கம் அளித்தார். இந்த நிலையில்,   பாலமேடு ஜல்லிக்கட்டில் பட்டியல் சமூகத்தினர்  புறக்கணிப்பட்டதாக எஸ்.பி. அலுவலகத்தில் அம்பேத்கர் பறையர் உறவின்முறை தலைவர் சந்தானம் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில்,  மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வந்த பட்டியலினத்தவர் காளைகள் புறக்கணிக்கப்பட்டன என குற்றம் சாட்டி உள்ளதுடன்,   ஜல்லிக்கட்டில் எங்களது சமூகத்தவர்களின் கோவில் காளைகளுக்கு மரியாதை அளிக்கவில்லை என்றும்,  ஜல்லிக்கட்டு போட்டியில் பட்டியலின சமூகத்தினரின் காளைகள் அவிழ்க்க தடை விதிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஜல்லிக்கட்டு போட்டியில்  சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாகவும்,  பட்டியலினத்தச் சேர்ந்த  மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர் என்றும்,   ஜல்லிக்கட்டு போட்டியில் ஊர் காளைகள் பிடிக்கப்பட்டாலும் பரிசுகள் வழங்கவில்லை.

ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிய பாகுபாட்டுடன் மாடுபிடி வீரர் தமிழரசன் அனுமதிக்காத நிலையில் விழா கமிட்டியிடம் கேட்டபோது போலீசார் அடித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சாதிய பாகுபாட்டுடன் ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! அமைச்சர் மூர்த்தி மீது டைரக்டர் ரஞ்சித் குற்றச்சாட்டு…

ஜல்லிக்கட்டு போட்டிகளில் அமைச்சர் மூர்த்தி சாதி பாகுபாடு காட்டியதாக புகார்! மதுரை ஆட்சியர் சங்கீதா விளக்கம்…

அரசு விழா என்ற பெயரில் தி.மு.க. கட்சி விழாவாக ஜல்லிக்கட்டு மாறிவிட்டது! முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு…