சென்னை: நாட்டின் தலைசிறந்த கல்வி நிலையங்களுல் ஒன்றான சென்னை ஐஐடியில் சாதிய பாகுபாடுகள் அவ்வப்போது தலைதூக்கி வருவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், “சாதிய பாகுபாடுகளுக்கு ஆளானதாக குற்றம் சாட்டி பேராசிரியர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள மத்தியஅரசு கல்வி நிறுவமான ஐஐடியில், மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் பேராசிரியராக விபின் புதியத் வீட்டில் கடந்த 2019ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இவர் சீனாவில் பள்ளிப்படிப்பை முடித்ததுடன், டெல்லி பல்கலைக்கழகம் இந்து கல்லூரியில் பொருளாதாரம் படித்துள்ளார். முனைவர் ஆராய்ச்சி படிப்பை அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். தன்னுடைய துறை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை பல்வேறு சர்வதேச இதழ்களில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, மத்தியஅரசு அறிவித்த லாக்டவுடனால் ஏற்பட்ட பொருளாதார  ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு குறித்த மதிப்பீட்டாய்வு  செய்து கட்டு வெளியிட்டிருந்ததார்

இந்த நிலையில், தற்போது விபின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தான் சாதீய ரீதியிலாக தொல்லைப்படுத்தப்பட்டதாக தனது ராஜினாமா கடிதத்தில்  குற்றம் சாட்டியுள்ளார்.

2019ம் ஆண்டு தான் பணிக்கு சேர்ந்த நாளில் இருந்தே சாதிய ரீதியாக தீண்டாமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறேன். அரசியல் சித்தாந்தங்கள் மற்றும் பாலினம் என்ற எந்தவிதமான பேதமும் இன்றி இல்லாமல் அதிகார மட்டங்களில் இருந்தவர்களிடம் இருந்து இந்த பாகுபாடு காட்டப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் உறவுகள் மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அதிகார பதவிகளில் உள்ள நபர்களிடமிருந்து பாகுபாடு  காட்டப்படுகிறது.  இதன் காரணமாக தான் ஐ.ஐ.டி.யை விட்டுவிட்டு,  வேறொரு நிறுவனத்திற்கு செல்வதாகவும், “இந்த விஷயத்தைத் தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என்றும் தெரிவித்து உள்ளார்.

”பட்டியல் சாதி மற்றும் பிற பின்தங்கிய வகுப்பு ஆசிரிய உறுப்பினர்களின் அனுபவத்தை ஆய்வு செய்ய இந்த நிறுவனம் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள விபின், எஸ்சி / எஸ்டி கமிஷன், ஓபிசி கமிஷன் மற்றும் உளவியலாளர்கள் இந்த குழுவில் இடம் பெற வேண்டும் என்றும் என்று தெரிவித்து, அதனால்தான்,  நான் மற்ற கல்வி நிறுவனத்திற்கு செல்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

ஐ.ஐ.டி. மெட்ராஸ் மாணவர்களால் சுதந்திரமாக நடத்தப்பட்டு வரும் சிட்டாபார் (ChitaBar) என்ற மாணவர்  அமைப்பு, இந்த விவகாரத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் 2006 மற்றும் 2019-ன் படி, ஆராய்ச்சி படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கும், பேராசிரியர் பணி நியமனங்களுக்கும் முறையாக இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் விரைவாக, ராஜினாமா செய்த பேராசிரியர் கூறியுள்ள புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றோம் என்று தங்களின் ட்விட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ளனர்.