சென்னை

சென்னை புறநகர் பகுதியான உத்தண்டியில் உலக வங்கி மேலாளர் வீட்டு கதைவை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில்  உலக வங்கியின் சென்னை அலுவலகம் உள்ளது.   அதன் மேலாளராக சுனில் குமார் என்பவர் பணி புரிந்து வருகிறார்.   அவருடைய வீடு அருகில் உள்ள உத்தண்டியில் அமைந்துள்ளது.   அவர் வெளிமாநிலத்துக்கு சென்றிருந்தார்.

நேற்று இரவு அவர் வெளி மாநிலத்தில் இருந்து சென்னை திரும்பினார்.  அப்போது அவருடைய வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  உள்ளே சென்று பார்த்த போது அவருடைய வீட்டு பீரோவில் இருந்து  கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த அவர் காவல்துறைக்கு புகார் அளித்தார்.

இந்த கொள்ளை குறித்து கானாத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப் பட்டுள்ளது.   விசரணை தீவிரமாக நடந்து வருகிறது.   சுனில் குமார் இல்லத்தில் இருந்த் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளும் ரூ.80 ஆயிரம் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]