சென்னை: திருவண்ணாமலை கிரிவலை பாதையில் கருணாநிதி சிலை வைக்க எதிர்த்து தொடரப்படட வழக்கு காரணாக, சில வைக்க உயர்நீதி மன்றம் தடை விதித்த நிலையில், தற்போது திடீரென மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இதையடுத்து, கருணாநிதி சிலை வைப்பதற் கான தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ளது.

திருவண்ணமலையில் வேங்கைக்கால் பகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை அமைக்க திமுக அமைச்சர் எ.வ.வேலு முயற்சித்து வந்தார். ஆனால், அந்த இடமானது, பட்டா நிலத்துடன் பொது இடத்தை ஆக்கிரமித்து உள்ளதாகவும், கிரிவலப்பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடம் என்பதால், கருணாநிதி சிலை வைக்தால்கிரிவலத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கூறி, கார்த்திக் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கருணாநிதி சிலை வைக்க தற்காலிக தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு திருவண்ணா மலையில் சிலை வைக்கப்படுவதை எதிர்த்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்ந்த, சென்னை வேளச்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவர் வாபஸ் பெறுவதாக கூறியதன் அடிப்படையில், அவர் வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்,மனு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து,வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், திருவண்ணாமலையில் கருணாநிதியின் சிலை அமைப்பதற்கான தடை நீங்கியது. மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு விரைவில் சிலை வைக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.
[youtube-feed feed=1]