மதுரை: தேசிய இளைஞர்கள் தினமான ஜன.12ந்தேதி மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடக்கோரிய வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

மனுதாரரின் மனுவை சட்டத்திற்கு உட்பட்டு 12 வாரத்திற்குள் பரிசீலித்து ‘தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை செயலர்  நடவடிக்கை எடுக்க’ உயர்நீதிமன்றம் மதுரை  கிளை உத்தரவிட்டுள்ளது.

சிறந்த இளைஞர் ஐகானான சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும். தேசிய இளைஞர் தினம் விவேகானந்தர் ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. தேசிய இளைஞர் தினம் ஜனவரி 12ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “உலகம் முழுவதும் ஜனவரி 12ஆம் தேதி உலக இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இளைஞர்கள் பலர் மது அருந்தி தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.

மதுபான கடைகள் திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், குடியரசு தினம், சுதந்திர தினம மற்றும் உழைப்பாளர்கள் தினம் ஆகிய 8 நாட்களில் விடுமுறை விடப்படுகிறது. இந்த வரிசையில் உலக இளைஞர்கள் தினம் சேர்க்கப்பட வேண்டும்.

மேலும் உலக இளைஞர்கள் தினத்தன்று மது அருந்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு செய்ய வேண்டும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, உலக இளைஞர்கள் தினத்தன்று தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஆணையர், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் கலால் துறை செயலர் மனுதாரரின் மனுவை சட்டத்திற்கு உட்பட்டு 12 வாரத்திற்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.