சென்னை:
சென்னையில் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கில் தளர்வு அளித்தாலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மீறும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், சென்னையில் நேற்று ஒரே நாளில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 137 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முகக்கவசம் அணியாமல் சென்ற 439 பேர் மீது வழக்குப் பதிவ செய்யப் பட்டதாகவும் கூறியுள்ளனர்.