சென்னை:
சென்னையில் ஆளுநர் மாளிகையை காங்கிரஸ் கட்சியினர் நேற்று முற்றுகையிட்ட விவகாரத்தில் 271 காங்கிரசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கே.எஸ்.அழகிரி, தங்கபாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உள்பட 271 காங்கிரஸ் கட்சியினர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel