சென்னை,

மிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 27ந்தேதி திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது.

இதற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக்கு மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  எடுக்கப்பட்ட தீர்மான முடிவின்படி, வரும் 27. ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்  மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த மனித சங்கிலி போராட்டத்தில் இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், திமுக நடத்த இருக்கும் மனித சங்கிலி போராட்ட த்திற்கு தடை விதிக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

[youtube-feed feed=1]