சென்னை :
ஊரடங்கு உத்தரவை மீறி ஆட்டோவில் சென்றதால், போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து வழக்கு தொடர்ந்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆட்டோ டிரைவர், அந்த இடத்திலேயே தன்மீத பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்டோவில் சென்றதற்காக வழக்குப்பதிவு செய்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கொரோனா தடுப்பு காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள வாகனங்கள் இயக்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. இந்த நிலையில், சென்னை தாம்பரம் அடுத்த காந்தி ரோடு வழியே 40 வயதான ஹரி என்பவர் ஆட்டோ ஓட்டி வந்ததாகத் பிடித்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.
இதனால் வேதனையடைந்த ஹரி, வழக்குப்பதிவு செய்த அதே இடத்திற்கு மீண்டும் பெட்ரோல் கேனுடன் வந்து, திடீரென தன்மீது ஊற்றி வைத்துக்கண்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.