விரிஞ்சிபுரம்

விரிஞ்சிபுரம் காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது,

வரும் ஏப்ரல் 19 அன்று தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அனுமதியின்றி கட்சி விளம்பரங்களை சுவர்களில் வரைவது, கட்சி கொடி கம்பங்கள் நடுவது, அனுமதியின்றி ஊர்வலம் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

வேலூர் பொய்கை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுற்றியுள்ள சுவர்களில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரங்கள் மற்றும் கட்சி சின்னங்கள் வரைந்திருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த பொய்கை கிராம நிர்வாக அலுவலர் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

[youtube-feed feed=1]