கோவை,
கோவை பாரதியார் பல்கலையின் துணை வேந்தர் கணபதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கோயம்புத்தூரில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக கணபதி பணியாற்றி வருகிறார்.
பணி நியமணத்தில் முறைகேடுகள் செய்வதாக இவர் மீது புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து வரும் மாணவி ஒருவர் தன்னை ஜாதி பெயர் கூறி அவமரியாதை செய்ததாக துணைவேந்தர் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை செய்த தேசிய மனித உரிமை ஆணையம், கணபதி மீதான புகார் உறுதியானதை தொடர்ந்து, கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் கணபதி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையறிந்த துணை வேந்தர் கணபதி தலைமறைகிவிட்டார். இதுகுறித்து கோவை வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.