
சென்னை
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக தினகரன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
ஆர் கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் போட்டியிட நேற்று திமுக, அதிமுக உட்பட 21 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சசிகலா அணியைச் சேர்ந்த டி டி வி தினகரன் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார்.
தினகரன் தனது மனுவை தாக்கல் செய்ய அதிக வாகனங்களுடன் வந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக தினகரன், மற்றும் அவர் ஆதரவாளர் வெற்றிவேல் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel