டெல்லி: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வழக்கு குறித்து, ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவி காயத்ரி என்ற தமிழக மாணவி சார்பாக அவரது தந்தை எஸ். வைத்தீஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 50 சதவீதத்துகு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. னால், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றவர், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க, வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர், 69 சதவீத இடஒதுக்கீடு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் எர். மேலும், இது அரசியல் சாசன பிரிவு 9ன் கீழ் சட்ட பாதுகாப்பு பெற்றது, எனவே அதை தடுக்கக்கூடாது என்று எடுத்துரைத்தார். மேலும், மராட்டிய இடஒதுக்கீடு வழக்கில் 50 சதவீதத்துக்கு மிகாமல் வழங்க வேண்டும் என கேட்கவில்லை என்றதுடன், தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு தனித்துவமானது என்றும், அதை பிற வழக்குடன் இணைத்து விசாரிக்கக்கூடாது எனவும் வாதிட்டர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.