டெல்லி:  ஆம்ஆத்மி ஆட்சியின்போது,  அரசின் பொதுநிதியை தவறாகப் பயன்படுத்தியாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல் தெரிவித்து உள்ளது.

டெல்லியில் விளம்பரப் பலகை வைக்க அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.  டெல்லி கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நேஹா மிட்டல் முன் தாக்கல் செய்யப்பட்ட இணக்க அறிக்கையில் காவல்துறையினர் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 10ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த  கெஜ்ர்வால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு, கடந்த 5ஆண்டுகால ஆட்சியின்போதுபல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக செய்திகள் பரவின. மேலும் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கெஜ்ரிவால், சிசோடியா உள்பட பலர் கைது செய்யப்பட்ட நிலையல்,  நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அட்சியை இழந்தது. தற்போது டெல்லியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கெஜ்ரிவால் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகிறது புதிய அரசு,. இந்த நிலையில், கடந்த  2019-ல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியின்போது துவாரகா முழுவதும் பெரிய விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. இதற்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆம் ஆத்மி முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங், துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோருடன் இணைந்து அரசு நிதியை அப்போதைய முதல்வர் கேஜ்ரிவால் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து புகார் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு மார்ச் 11-ம் தேதி அன்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி முன்னாள் முதல்வர்,  அரவிந்த் கேஜ்ரிவால் தவிர, முன்னாள் எம்எல்ஏ குலாப் சிங் மற்றும் துவாரகாவின் அப்போதைய கவுன்சிலர் நிதிகா சர்மா மீதும் பெரிய விளம்பரப் பதாகைகள் வைத்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் விளம்பரப் பலகை வைக்க அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கினை விசாரிக்க போலீஸார் கூடுதல் அவகாசம் கோரிய நிலையில் வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்.18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

[youtube-feed feed=1]