நாடே இந்த மூன்று வேளாண்மைச் சட்டங்களை ஒன்றிணைந்து எதிர்த்த போது, இங்கே முதலமைச்சராக இருந்த எடப்பாடி, “இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது.. இந்தப் போராட்டத்தை நடத்துபவர்கள் இடைத்தரகர்கள்… ” என்று நக்கலாகப் பேசினார்!

இவரை விடத் தீவிரமாக, தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலையோ, “இந்தச் சட்டத்திலிருந்து ஒரு கமாவைக் கூட அகற்ற மாட்டோம்!

இது காங்கிரஸ் அரசு அல்ல… பயந்து பின் வாங்குவதற்கு! நாங்கள் பி. ஜே. பி ” என்று கொக்கரித்தார்!

ஆனால், இன்று பிரதமர் மோடி திடீரென்று” அந்த சர்ச்சைக்கு உரிய மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் ” என்று அறிவித்து விட்டார்!

வீராப்பும், ஆணவமுமாகப் பேசிய எடப்பாடியும்,அண்ணா மலையும் இப்போது மக்கள் மன்றத்தில் ‘ காமெடி பீசாகி’ இருக்கிறார்கள்!

*** ஓவியர் இரா. பாரி.