பிரபல கர்நாடக இசை கலைஞரான சுதா ரகுநாதன், தன் மகளை மதம் மாற்றி திருமணம் செய்து வைக்கும் விவகாரம் சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளத்தில் கடந்த 19ம் தேதி பெரும் புயலை கிளப்பிய விவகாரம் சுதா ரகுநாதனின் மகளின் திருமண அழைப்பிதழ். தன் மகள் பத்மாவதி என்கிற மாளவிகாவிற்கு வெளிநாட்டை சேர்ந்த மைக்கேல் மார்பி என்பவரை மனம் முடித்து வைக்க சுதாரகுநாதன் முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கான அழைப்பிதழ்கள் வெளியாகியுள்ளதாகவும் கூற திடீரென விமர்சனங்கள் எழுந்தன. சென்னை ஏ.வி.எம் ராஜேஷ்வரி கல்யாண மண்டபத்தில் நடக்கும் இத்திருமணத்தில் பல்வேறு இசை கலைஞர்களும், திரை பிரபலங்களும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது.
இத்தகைய சூழலில் மதம் மாற்றி தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க உள்ள சுதா ரகுநாதனின் முடிவுக்கு இந்து அமைப்புகள் பல தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றன. இத்தகைய செயலுக்காக சுதா ரகுநாதன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சுதா ரகுநாதனை இனி எந்தவொரு கோவில் மற்றும் கச்சேரி சபைகளில் பாட அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே ஓ.எஸ் அருண், நித்யஶ்ரீ மகாதேவன் உட்பட சிலருக்கு முன்னர் இதுபோன்ற ஒரு எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது சுதா ரகுநாதனுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுதா ரகுநாதன் தரப்பில் இதை மறுத்துள்ளனர்,மருமகன் ஹிந்து வழக்கப்படி தான் மணமுடிக்க வேண்டியதாக தெரிவித்துள்ளனர்.