மைசூரு:

பெங்களூரு அருகே உள்ள  வொண்டர் லா பொழுதுபோக்கு பூங்காவில் திரில்லர் சவாரியான  ‘கேப்சூல் சவாரி’யின்பொது, திடீரென கேப்சூல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் சவாரி செய்த  4 பேரின் கால்கள் உடைந்து படுகாயம் அடைந்தனர்.

இந்த நிகழ்வு கடந்த 18ந்தேதி நடைபெற்ற நிலையில், இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்காமல் பூங்கா நிர்வாகம் மறைத்துள்ள நிலையில்,  தற்போது, கேப்சூல் சவாரி விபத்து குறித்த பதபதைக்கும்  வீடியோ வைரலானதை தொடர்ந்து கர்நாடக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பெங்களூரிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவில் பிடதி அருகில் வீ-கார்டு குரூப் நிறுவனத்தால் நடத்தப்படும் கேளிக்கை பூங்கா வொண்டர் லாஆகும். சுமார்  82 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள பிரமாண்டமான   இந்த கேளிக்கைப்பூங்கா நிலம் மற்றும் நீரில் அமைந்த 53 வகையான கேளிக்கை சவாரி வகைகள் உள்ளன.  மேலும் இந்த பூங்காவில் இசை நீரூரற்று, லேசர் ஷோ, வர்ச்சுவல் ரியலிட்டி ஷோ, எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தக்கூடிய ஷவர்களுடன் கூடிய நடன மேடை  போன்றவையும் உள்ளன.

இங்குள்ள பரவசமூட்டும்  கேளிக்கை சவாரிகளில் சவாரி செய்ய பெரும்பாலோர் ஆசைப்பட்டு அங்கு செல்வது வழக்கம். அதன்படி கடநத் 18ந்தேதி அன்று திரில்லர் பொழுது போக்கு சவாரியான கேப்சூர் சவாரியில் ஒரு குடும்பத்தினர் சுற்றிக்கொண்டிருக்கும்போது, திடீரென அதை இயக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஒர கேப்சூல் தலைகீழாக கவிழ்ந்து தரையில் முட்டியது

இந்த விபத்தில்  அந்த கேப்சூல்களில் இருந்த 4 பேரின் கால்களும் சிக்கி பல்த்த காயம் அடைந்தன. அவர்களின் கூக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக  மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகம் சார்பிலோ, பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலோ காவல்துறை யில் புகார் கொடுக்காத நிலையில், தற்போது, விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து கூறிய பிடதி சப்இன்ஸ்பெக்டர் ஹரிஷ்,  சுமார் 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட 4 பேர் இந்த விபத்தில் காயமடைந்தாக தெரிவித்து உள்ளார். இந்த கேப்சூலில் 8 பேர் இருந்த நிலையில், முன்பகுதியில் உட்கார்ந்திருந்த 4 பேர் மட்டுமே காயமடைந்ததாகவும், மற்ற 4 பேர் எந்தவித காயமுமின்றி தம்பித்ததாகவும் கூறி உள்ளார்.

ஆனால் இந்த விபத்து குறித்து கூறியுள்ள வொண்டர் லா  செய்தி தொடர்பாளர், இது ஒரு சாதாரண விபத்துதான்….அதிர்ச்சி அளிக்கும்படியான பெரிய விபத்து அல்ல… அதனால்தான காவல்துறையில் புகார் தெரிவிக்கவில்லை என்று தெனாவெட்டாக கூறியுள்ளார்.