புதுடெல்லி:

5 ஆண்டுகளுக்கு மேலாக ராஜ்யசபையில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் மசோதாக்கள் காலாவதியானதாகக் கருதப்படும் என ராஜ்ய சபை தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.


துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு ராஜ்யசபைக்கும் தலைவராக இருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மக்களவையில் நிறைவேற்றப்பட்டபின், ராஜ்யசபையில் 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் தானாகவே காலாவதியாகிவிடும்.

மக்களவை கலைக்கப்படும் பட்சத்தில், ராஜ்யசபையில் நிலுவையில் தான் மசோதாக்கள் இருக்கும்.

5 ஆண்டுகள் நிலுவையில் இருக்கும் மசோதா தானாக காலாவதியாக வழி வகுக்கும் சட்ட விதி குறித்து விவாதிக்க வேண்டும்.

அவைகளில் கூச்சல், குழப்பம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஜனநாயக அமைப்பு பலவீனமடைய ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
16-வது மக்களவை முடிந்ததுமே, 22 மசோதாக்கள் ராஜ்யசபையில் காலாவதியாகிவிட்டன.

இந்திய மருத்துவ கவுன்சில் திருத்தச் சட்டம் உட்பட 33 மசோதாக்கள் 32 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.

15-வது மக்களவையை விட, 1-வது மக்களவையில் அதிக அளவு மசோதாக்கள் ராஜ்யசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.