காந்திநகர்:
கடந்த 2002ம் ஆண்டு குஜராத் அகமதாபாத் அருகே நரோடா பாத்தியாவில் நடந்த 3 நாள் கலவரத்தில் 100 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நரோடா கிராம் பகுதியில் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இதில் முன்னாள் பாஜ பெண் அமைச்சர் மாயா கோடாணிக்கு 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2014ம் ஆண்டு கோடாணி ஜாமின் பெற்றார். இந்த வழக்கு விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண் டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் கோடாணிக்கு ஆதரவாக அமித்ஷா சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த போது கோடாணியும், அமித்ஷாவும் எம்எல்ஏ.க்களாக இருந்தனர். சம்பவம் நடந்தபோது அகமதாபாத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள குஜராத் சட்டமன்றத்தில் கோடாணி அமித்ஷாவுடன் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் தற்போது அனைவரிடம் குறுக்கு விசாரணை முடிந்துவிட்டது. அமித்ஷாவிடம் மட்டும் விசாரணை நடக்கவில்லை. அவருக்க சம்மன் எந்த முகவரிக்கு அனுப்புவது என்று தெரியாமல் தவிப்பதாக கோடாணி தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவரத்திற்கு பின் அப்போதைய மோடி அமைச்சரவையில் கோடாணி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.