சென்னை: சென்னையில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில்   அரசு மருத்துவக் கல்லூரி  மாணவர் விடுதியில் கஞ்சா பொண்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பயிற்சி மருத்துவர்கள் மூவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போதை பழக்கத்தை தடுக்க வேண்டிய மருத்துவ கல்லூரி மாணவர்களே கஞ்சாவுக்கு அடிமையாகி இருப்பது வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விடுதி உள்ளது. இதில் ஏராளமான மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் விடுதியில் மாணவர்கள் போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதாக,  ராஜீகாந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன், அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, அங்கு காவல்துறை குழு சென்று,.  மாணவர் விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக விடுதியின் மூண்ராவது மாடியில் தங்கியிருந்த பயிற்சி மருத்துவர்கள் அறையில் சோதனை செய்தனர். இதில், சில பயிற்சி மருத்துவர்கள் போதைப்பொருள்களை பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. இந்த சோதனையின்போது, கஞ்சா வைத்திருந்த பண்டல்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இதனையடுத்து, பயிற்சி மருத்துவர்கள் தருண், சஞ்சய், ஜெயந்த்  ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், இந்த மாணவர்களுடன் சேர்ந்து மேலும் பல பயிற்சி மருத்துவர்களும் போதைப்பொருளை பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதும்,  அங்கு காணப்பட்ட போதை வஸ்துக்கள் மற்றும் மது பாட்டில்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து,   பயிற்சி மருத்துவர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர். இதில், மூன்று பயிற்சி மருத்துவர்களும் குறைவான அளவு கஞ்சாவை வைத்திருந்ததால், ஜாமினில் வெளிவரக்கூடிய சட்டத்தின் கீழ் போலீசார் மூவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, 3 பேரையும் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பயிற்சி மருத்துவர்களுக்கு யார் போதைப்பொருள் சப்ளை செய்கிறார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், கோட்டூர்புரம் பகுதியில் இருந்து கஞ்சா சப்ளை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலில் பேரில், போலீசார் விசாரணை செய்ததில், மருத்துவ மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த சைதாப்பேட்டையை சேர்ந்த ரியோ என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், கைதான ரியோக்கு கஞ்சா எங்கு இருந்து வருகிறது? மருத்துவக் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா சப்ளை செய்ததன் பின்னணியில் உள்ள கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறித்து கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பல்வேறு பூங்காங்களிலும், மேம்பாலம் மற்றும் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இது தொடர்பான புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

.