சென்னை:

மிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் நடைபெற உள்ள 18 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் நேர்காணல் நாளை நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலும் தமிழகத்தில் காலியாக உள்ள 18சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்  ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதையொட்டி, கடந்த 11ந்தேதி அதிமுக தலைமை  சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடு பவர்கள் விருப்பமனு அளிக்கலாம் என கூறியிருந்தது. இந்த நிலையில், விருப்ப மனு அளித்த வர்களிடம் நாளை  வேட்பாளர் நேர்காணல் நடைபெறும் என  அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  திருவாரூர் தொகுதிக்கு விருப்ப மனு வாங்கப்பட்டு வேட்பாளர் நேர் காணலும் நடைபெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள 17 தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் அளித்தவர்களிடம் நாளை நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

முன்னதாக நாளை காலை  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாள ருமான ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை காலை 10 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில்  நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் நேர் காணல் நடைபெறும் என கூறப்பட்டு உள்ளது.