மும்பை: அழகுசாதன பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் டவ் ஷாம்பு உள்பட பிரபல பிராண்டுகளின்  உலர் ஷாம்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. இந்த ஷாம்புகளின் மூலம் புற்றுநோய்  ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு முந்தைய தயாரிப்புகளை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.

அதன்படி, அக்டோபர் 2021 க்கு முன் தயாரிக்கப்பட்ட   டவ்  நெக்ஸஸ், சுவேவ், டிஜிஐ (ராக்காஹோலிக் அண்ட் பெட் ஹெட்) மற்றும் டிரெசெம் ஆகிய உலர் ஷாம்பு ஏரோசல் தயாரிப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட லாட் குறியீடுகளை கொண்ட தயாரிப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது. (Dove, Nexxus, Suave, TIGI (Rockaholic and Bed Head), and TRESemme due to potentially elevated levels of benzene) இந்த தயாரிப்புகளில் புற்றுநோயை உருவாக்கும் பென்சீனின் அளவு அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ள நிலையில், அதை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (Hindustan Unilever Limited) இந்தியாவின் மிக பெரிய வேக நகர்வு நுகர்வு பொருட்களை தயாரிக்கும் நிறுவனம். இந்நிறுவனத்தில் ஆங்கிலோ டச்சு நிறுவனமான யூனிலீவர் 52% பங்குகளை கொண்டுள்ளது. அதன் தயாரிப்புகள் உணவு மற்றும் பானங்கள், சுத்திகரிப்புப் பொருட்கள், அழகுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் ஆகியவை அடங்கும். யூனிலீவர் பழமையான பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றாகும்; ஐரோப்பாவின் ஏழாவது மிக மதிப்பு வாய்ந்த நிறுவனமாகும். அதன் தயாரிப்புகள் சுமார் 190 நாடுகளில் கிடைக்கின்றன.

31 மார்ச் 2022 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான நிறுவனத்தின் வருவாய் ரூ.50,336 கோடி ஆகும், ஏனெனில் 31 மார்ச் 2021 அன்று முடிவடைந்த நிதியாண்டிற்கான ரூ.45,311 கோடி வருவாய்க்கு எதிராக இருந்தது. 2022ம் ஆண்டுக்கான வரிக்கு பிறகு இலாபம் 11% அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் இந்நிறுவனம் விற்பனை செய்யும் பொருட்களே.

இந்நிறுவனத்தின் தயாரிப்பில், 24% வீட்டு பராமரிப்பு பொருள் உள்ளது. இதில் 4% அழகு மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உள்ளன.  அதன்படி ‘லக்ஸ்’, ‘டவ்’, மற்றும் ‘பியர்ஸ்’  மட்டுமின்றி, மேலும்  ஹேர் கேர்  தயாரிப்புகளிலும் களமிறங்கியது.  காய்கறி எண்ணெய்கள்,  சரும பராமரிப்பு மற்றும் நிற காஸ்மெட்டிக்ஸ் மட்டுமின்றி, டவ் ஹேர் தெரபி, சன்சில்க் ஆனியன் மற்றும் ஜோஜோபா ஆயில் ஷாம்பூ, லைஃப்புவாயின் ‘பவுடர் டு லிக்விட்’ ஹேண்ட்வாஷ், மற்றும் லாக்மியின் புதிய வரம்பிலான கண் மேக்கப் , டவ் சாம்பு உள்பட பல்வேறு அழகு சாதனை பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. அஇதுமட்டுமின்றி,  குளிர்பானங்கள், உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் மற்றும்  தேயிலை,  கெட்சப், ஜாம்ஸ் மற்றும் சூப்கள் போன்ற நுகர்பொருள் தயாரித்துவிற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், அந்நிறுவனத்தின் அழகு பொருட்களின் காரணமாக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, டவ் உள்பட பல்வேறு டிரை ஷாம்புகளை திரும்ப பெறுவதாக ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் அறிவித்து உள்ளது.