பாட்னா:

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மகாவீர் புற்றுநோய் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தற்போது கூட்டம் அலைமோதுகிறது. தினமும் 60 முதல் 100 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இங்குள்ள மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 400 மட்டுமே.

இந்த மருத்துவமனையின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் அசோக் கோஷ் கூறுகையில், ‘‘இங்கு அறுவை சிகி ச்சை செய்ய 2 மாத காத்திருப்போர் பட்டியல் உள்ளது. அதன் பிறகு இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை கூட ஏற்பட்டுவிடலாம்’’ என்றார்.

மருத்துவமனை உள்ளே நுழைந்தால் இது பொது மருத்துவமனையை£? அல்லது புற்றுநோய் மருத்துவமனையா? என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு கூட்டம் இருக்கிறது. பொது சுகாதாரத்தில் மோசமான நிலையில் உள்ள பீகார் மாநிலத்தில் இருந்து தான் அதிகளவில் நோயாளிகள் வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் போதுமான ஊழியர்கள் இல்லை. தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் மக்கள் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர்.

மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகள் அதிகம் உள்ளது. ஆனால், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இங்கு வசூலிக்கப்படும் சிகிச்சை கட்டணம் மிக அதிகம். அதனால் தான் மகாவீர் புற்றுநோய் மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக உள்ளது.

மும்பையில் உள்ள டாடா நினைவு புற்றுநோய் மருத்தவமனை தான் புற்றுநோய்க்கு சிறந்த மருத்துவமனையாக உள்ளது. இங்கு நாடு முழுவதும் இருந்து ஆண்டிற்கு 25 ஆயிரம் நோயாளிகள் வருகின்றனர். ஆனால் மகாவீர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 22 ஆயிரம் நோயாளிகள் வந்துள்ளனர்.

பீகாரில் இருந்து மட்டுமல்ல உ.பி., நேபாளம் ஆகிய இடங்களிலும் இருந்து நோயாளிகள் வருகின்றனர். பித்தபை அல்லது கல்லீரல் புற்றுநோய் தாக்குதல் காரணமாக இங்கு அதிகம் வருகின்றனர். இந்த நோய் நீரில் இருக்கும் ஆர்சனிக் என்ற ரசாயன நச்சுத்தன்மை காரணமாக ஏற்படுகிறது.

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஆர்சனிக் என்ற ரசாயன நச்சுத்தன்மை பீகார் நிலத்தடி நீரில் அதிகளவில் உள்ளது. ஒரு பில்லியனுக்கு 10 பிரிவு என்ற அடிப்படையில் குடிநீரில் இருக்க வேண்டிய ஆர்சனிக் ந ச்சுத்தன்மை இங்கு 50 என்ற அடிப்படையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்த ந ச்சுத்தன்மை மிக அதிகமாக ஒரு பில்லியனுக்கு 3 ஆயிரத்து 880 பிரிவுகள் என்ற அடிப்படையில் இரு க்கிறது.

பீகார் மாநிலத்தில் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள 16 வட்டாரங்களில் நிலத்தடி நீரில் நச்சுத்தன்மையின் அளவு அபாய கட்டத்தில் உள்ளது. 2 வட்டாரங்களில் மட்டுமே பாதுகாப்பான அளவில் உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இமயமலை வழியாக இந்த நச்சுத்ன்மை பீகார் குடிநீருக்குள் நுழைந்துள்ளது. இமயமலையில் இருந்து ரசாயனம் மற்றும் இரும்பு துகள்கள் கடந்து கேஞ்சடிக் ஆற்றுப் படுகையில் படிந்துள்ளது. பின்னர் படிப்படியாக குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்து விட்டது. இதனால் ஆற்றுநீரை குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயன்படுத்தும் பீகார், உ.பி., மேற்குவங்கம், பங்களாதேஷ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கு முன் 1970ம் ஆண்டு ஆற்றுநீரில் அதிகளவில் பேக்டீரியா கலந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அப்போது முதல் நிலத்தடி நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி பயன்படுத்துமாறு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.

போர்வெல்லில் 60 அடி முதல் 200 அடி வரை ஆர்சனிக் நச்சுத்தன்மை இருக்கும். நிலத்தடி நீர் 60 அடிக்கு கீழ் செல்லும் போது ரசாயன நச்சு தாமாக வெளியில் வர தொடங்குகிறது. இந்த நீரை பருகும் மனிதர்கள், தாவரங்கள், கால்நடைகளை புற்றுநோய் தாக்குகிறது.

பீகார் புக்ஸர் மாவட்டத்தில் உள்ள திலக் ராய் கா ஹத்தா என்ற கிராமத்தில் 28 சதவீதம் பேருக்கு தோல் நோய் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றர். 86 சதவிதம் பேர் இரைப்பை, 57 சதவீதம் பேர் கல்லீரல் தொடர்பான பிரச்னையாலும், 64 சதவீதம் பேர் பசியின்மையாலும் அவதிப்படுகின்றனர். 6 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு 4 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் மாநிலம் முழுவதும் பரவலாக நிலத்தடி நீரின் நச்சுதன்மையால் மக்கள் பாதிப்பது தொடர்கதையாகி வருகிறது.