பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 24ந்தேதி முதல் வரும் ஜனவரி 2-ம் தேதி வரை அறிவிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். ஆனால் இரவு நேர கொண்டாட்டம், கேளிக்கைகளுக்கு தடை தொடருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய முதல்வர், புதியவகை  உருமாறிய கரோனா வைரஸ்தொற்று பரவலை தடுக்கும் வகையில், மக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டது. அதனால்தான் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலத்தில் இத்தகைய உத்தரவால் பொதுமக்களும் வியாபாரிகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார்கள் என மக்கள் கருத்து தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து அமைச்சர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும்,  அதன் அடிப்படையில், ஜனவரி 2‍-ம் தேதிவரை விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. எனவே மக்களும், வியாபாரிகளும் வழக்கம் போல செயல்படலாம் என்று தெரிவித்தார்.

ஆனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு இரவு நேர கொண்டாட்டங்களுக்கு தடைதொடரும் என்றும் கூறியுள்ளார்.