டெல்லி: இந்தியா கனடா இடையே ஏற்பட்ட கருத்து மோதல் முடிவுக்கு வந்தாலும், இரு நாடுகளுக்கு இடையேயான ஊடல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. கடந்த ஆண்டு சுமார் 40% இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை கனடா அரசு நிராகரித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் தங்கியிருந்து இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த, காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023ம் ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார். முன்னதாக, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக செயல்படும் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், அதை கனடா கண்டுகொள்ளாத நிலையில்தான், காலிஸ்தான் தலைவர கனடாவில் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையை செய்தது, இந்திய அரசு அந்நாட்டு பிரதமர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இந்தியா-கனடா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து இரு நாடுகளும், விசாக்களை நிறுத்தி வைத்தன. இந்த மோதல் உலக நாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் இந்திய மாணவர்கள் கனடா சென்று மேற்கல்வி படிப்பதில் சிக்கல் எழுந்தது.
இதையடுத்து, கனேடியர்களுக்கான 13 வகை விசாக்களை நிறுத்துவதன் மூலமும், இந்தியாவில் கனடாவின் இராஜதந்திர இருப்பைக் குறைப்பதன் மூலமும் இந்தியா விரைவாக பதிலளித்தது, இந்த நடவடிக்கை வியன்னா ஒப்பந்தங்களை மீறுவதாக ஒட்டாவா கூறியது. பின்னர் அக்டோபர் 25 ஆம் தேதி, நான்கு பிரிவுகளின் கீழ் விசா வழங்குவதை மீண்டும் தொடங்கும் என்று இந்திய அரசு கூறியது,
இதையமுடுத்து இரு நாடுகளும் தங்களது கருத்து வேறுபாடுகளை மறந்து பயணிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு குறைந்து, பழையபடி விசா நடவடிக்கைகளை தொடரும் என அறிவித்தன.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக கனடாவுடனான இந்தியாவின் சமீபத்திய இராஜதந்திர மோதலை அடுத்து, சண்டிகர், மும்பை மற்றும் பெங்களூரு வில் இருந்து விசா மற்றும் தூதரக சேவைகளை கனடா திரும்பப் பெற்றுள்ளது, இது அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் குளிர்கால அமர்வுக்கு பல்கலைக்கழகங்களில் சேரத் தயாராகும் மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது. அதைத் தொடர்ந்து, டிசம்பருக்குள் ஐ.ஆர்.சி.சி செயல்படுத்த எதிர்பார்க்கும் 38,000 விசாக்களைப் பொறுத்தவரை, துறையால் 20,000 மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும் கனடா பதிவு செய்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், நுழைவு விசா, வணிக விசா, மருத்துவ விசா மற்றும் மாநாட்டு விசா ஆகிய சில வகைகளில் விசா சேவைகளை மீட்டமைப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்களை குறைக்க இந்தியா முயல்கிறது.
இந்திய மாணவர்கள் தற்போது 240 நாடுகளில் கல்வி பயின்று வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை மாணவர்களின் சிறந்த தேர்வுகளாக உள்ளன.
இந்த நிலையில்தான்,கடந்த ஆண்டு கனடாவில் கல்வி பயில விண்ணப்பித்தவர்களில் சுமார் 40% இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை கனடா அரசு நிராகரித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் மிகப்பெரிய சுதந்திரமான வீட்டுவசதி செய்தி நிறுவனமான பெட்டர் டுவெல்லிங், இந்த வார தொடக்கத்தில் கனடிய கல்விக்கான இந்திய தேவை சரிந்துவிட்டது என்று கூறியபோது அலைகளை உருவாக்கியது. கடந்த ஆண்டு கனடாவில் உள்ள அனைத்து சர்வதேச மாணவர்களில் இந்தியர்கள் சுமார் 40% ஆக இருப்பதால், கனடாவில் படிப்பதில் இந்தியர்களின் ஆர்வம் குறைவது பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]