கனடாவின்  ஒட்டாவாவிலுள்ள கனடிய பாராளுமன்றத்தில் முதல் முறையாக ஹோலிப் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் வடமாநிலங்களிலும், வடஇந்தியர் வசிக்கும் இடங்களிலும்  ஹோலிப் பண்டிகை வியாழனன்று கொண்டாடப்பட்டது. சென்னையிலுள்ள சௌகார்பேட்டையிலும் ஹோலி கொண்டாடப்பட்டது.
பாகிஸ்தானில் முதன்முறையாக ஹோலிப் பண்டிகை கொண்டாடிய செய்தி சமூக ஊடகங்களில் பெரிதாகப் பேசப் பட்டது.
அதே வியாழக்கிழமை அன்று, கனடாவிலும் ஹோலிப் பண்டிகை கொண்டாடிய செய்தி வெளியாகியுள்ளது.
கனடாவிலுள்ள இந்திய உயர் ஆணையகத்தின் ஈடுபாட்டுடன் ஒட்டாவா தொகுதியின் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் பாராளுமன்ற வளாகத்தில் நிறங்களின் திருவிழா ஆரம்பித்தது.
300 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் பங்கேற்பாளர்கள் ‘வண்ணப்பொடி”களால் அலங்கரிக்கப்பட்டனர்.
canada-holy
ஹோலியின் தோற்றம் பற்றிய ஒரு நடன-நாடகம் தர்ப்பன் கலை குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. கனடிய பாரம்பரியத்தின் அமைச்சர் மெலனி ஜோலி மற்றும் இந்திய உயர் ஆணையர் விஷ்ணு பிரகாஷ் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
“இந்த ஹோலிப் பண்டிகை நட்பைப் புதுப்பிக்கவும் சமாதானத்தைக் கொண்டாடும் ஒரு வாய்ப்பாகும் அது மட்டுமல்லாது வழக்கமான நம்பிக்கைகளான நல்லவைகளும் தீயவைகளும் பிரதிபலிக்கும் நேரம் என்றும் இறுதியில் இருளை ஒளி நிச்சயம் வெல்லும் ” என்றும் செய்தியாளர்களிடம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ கூறினார்.
holi2
மேலும் அவர், “நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றாக சேரும் இந்த சந்தோஷமான நேரத்தில், நம் நாட்டிற்கு இந்து மத நம்பிக்கை கொண்ட கனடியர்களின் பெரும் பங்களிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும்” என்று கூறினார்.
holi3
“நமது பன்முகத்தன்மை தான் நமது மிகப் பெரிய பலம். எங்கள் குடும்பத்தின் சார்பாக, சோபியும் நானும் இந்த பண்டிகையை கொண்டாடும் அனைத்து நல்ல  உள்ளங்களுக்கும் வேடிக்கையான, சந்தோஷமான வண்ணமயமான ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் கனடிய பிரதமர் கூறினார்.
holi1