டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், இந்திய விமானங்களுக்கு கனடா நாடு ஒரு மாதம் தடை விதித்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அரை இதுவரை இல்லாத அளவில் பரவி வருகிறது. தினசரி பாதிப்பு மூன்று  லட்சத்தை தாண்டிய நிலையில், தினசரி பலி எண்ணிக்கையும் 2ஆயிரத்தை கடந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில்,  இந்தியா விமானங்களுக்கு சில நாடுகள் தடை விதித்த நிலையில், தற்போது கனடா நாடும் ஒரு மாதம் தடை விதித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களில், பயணிகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது அதிகரித்து வருவதால் இந்த தடை விதிக்கப்படுவதாக கனடாவின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தடையானது அனைத்து வணிக மற்றும் தனி விமானங்களுக்கும் பொருந்தும்.  ஆனால், சரக்கு விமானங்களுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.