download
கடந்த இரு நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் கனத்த மழைவரை பெய்துகொண்டு இருக்கிறது.  சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில்,  அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக மழை குறையும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே மையம் கொண்டுள்ளதால்  இது புயலாக மாறவும் வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம்,  வடதமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.